6 Nov 2012

துருக்கியின் அராரத் மலைக்கு சென்று வருவோமா?





"அவரது சமுதாயத்தில் ஏக இறைவனை மறுத்த பிரமுகர்கள் 'இவர் உங்களைப் போன்றஒரு மனிதரைத் தவிர வேறில்லை. உங்களை விட சிறப்படைய இவர் விரும்புகிறார். இறைவன் நினைத்திருந்தால் வானவர்களை அனுப்பியிருப்பான். முந்தைய நமது முன்னோர்களிடமிருந்து இதை நாம் கேள்விப் பட்டதுமில்லை.' என்றனர்.'இவர் ஒரு பைத்தியக்காரர் தவிர வேறில்லை. சிறிது காலம் வரை இவருக்கு அவகாசம் கொடுங்கள்." என்றனர்.23 : 24, 25 - குர்ஆன்என் சமுதாயமே! என்னிடம் எந்த வழி கேடும் இல்லை. மாறாக நான் அகிலத்தின் இறைவனுடைய தூதன்' என்று அவர் கூறினார்.7 : 61'என் இறைவனின் தூதுச் செய்திகளை உங்களுக்கு எடுத்துச் சொல்கிறேன். உங்களுக்கு நலம் நாடுகிறேன். நீங்கள் அறியாதவற்றை இறைவனிடமிருந்து அறிகிறேன்.'7 : 62'நீங்கள் இறைவனை அஞ்சவும் உங்களுக்கு அருள் செய்யப் படவும் உங்களை எச்சரிப்பதற்காகவும் உங்களைச் சேர்ந்த மனிதருக்கு உங்கள் இறைவனிடமிருந்து அறிவுரை வருவதில் ஆச்சரியம் அடைகிறீர்களா?' என்றும் கூறினார்.7 : 63மேற் கண்ட குர்ஆனிய வசனங்களின் மூலம் அந்த மக்கள் நோவாவை நிராகரித்தது நமக்கு விளங்குகிறது.'நூஹே! எங்களுடன் தர்க்கம் செய்து விட்டீர். அதிகமாகவே தர்க்கம் செய்து விட்டீர். உண்மையாளராக இருந்தால் நீர் எங்களுக்கு எச்சரிப்பதை எங்களிடம் கொண்டு வாரும்' என்று அவர்கள் கூறினர்.'அல்லாஹ் நாடினால் அவன்தான் அதை உங்களிடம் கொண்டு வருவான். நீங்கள் அவனை வெல்ல முடியாது.' என்று அவர் கூறினார்11 : 32,33 - குர்ஆன்.அந்த மக்களே வரம்பு மீறி நோவாவிடம் 'இறைவனின் தண்டனையைக் கொண்டு வாரும்' என்றனர். எனவே 'இனி இந்த மக்கள் திருந்த மாட்டார்கள். இவர்கள்அழியும் நேரம் வந்து விட்டது என்று நோவாவிடம் கூறிய இறைவன் நல்லவர்களைக் காப்பாற்றுவதற்காக ஒரு கப்பலை தயார்படுத்த சொன்னான்.'அவர் கப்பலைச் செய்யலானார். அவரது சமுதாயத்தின் பிரமுகர்கள் அவரைக் கடக்கும் போது அவரைக் கேலி செய்தனர். 'நீங்கள் எங்களைக் கேலி செய்தால் நீங்கள் கேலி செய்தது போல் உங்களை நாங்களும் கேலி செய்வோம்.' என்று அவர் கூறினார்.11 : 38 - குர்ஆன்'இழிவு தரும் வேதனை யாருக்கு வரும்? நிலையான வேதனை யாருக்கு இறங்கும் என்பதை அறிந்து கொள்வீர்கள்.' என்றும் கூறினார்.11 : 39 - குர்ஆன்.இறைவனின் வேதனை அந்த மக்களை சூழும் நேரமும் வந்தது."மலைகளைப் போன்ற அலை மீது அது அவர்களைக் கொண்டு சென்றது. விலகி இருந்த தன் மகனை நோக்கி 'அருமை மகனே! எங்களுடன் ஏறிக் கொள். ஏக இறைவனை மறுப்போருடன் ஆகி விடாதே!' என்று நூஹ் கூறினார்.11 : 42 - குர்ஆன்'ஒரு மலையின் மீது ஏறிக் கொள்வேன். அது என்னை தண்ணீரிலிருந்து காப்பாற்றும்' என்று அவன் கூறினான். 'இறைவன் அருள் புரிந்தோரைத் தவிர அல்லாஹ்வின் கட்டளையிலிருந்து காப்பாற்றுபவன் எவனும் இன்று இல்லை.' என்று அவர் கூறினார். அவ்விருவருக்கிடையே அலை குறுக்கிட்டது. அவன் மூழ்கடிக்கப் பட்டோரில் ஆகி விட்டான்.11 : 43 - குர்ஆன்ஒரு தூதரின் மகனாக இருந்தும் தன் தந்தையை இறைத் தூதர என விசுவாசம் கொள்ளாததால் நஷ்டமடைந்தோரில் ஒருவனாக ஆகி விட்டான். குடும்ப பாரம்பரியத்தால் நான் சிறந்தவன் என்று சொல்லித் திரிபவர்களுக்கு பாடமாக மேற்கண்ட இறை வசனம் அமைந்துள்ளது.” பூமியே! உனது தண்ணீரை நீ உறிஞ்சிக் கொள்! வானமே நீ நிறுத்து!’ என்று இறைவனால் கூறப்பட்டது. தண்ணீர் வற்றியது. காரியம் முடிக்கப்பட்டது. அந்தக் கப்பல் ஜூதி மலை மீது அமர்ந்தது. ‘அநீதி இழைத்த கூட்டத்தினர் இறையருளை விட்டும் தூரமாயினர்’ எனவும் கூறப்பட்டது “. திருக்குர்ஆன் 11:44.” இதில் சான்று உள்ளது. அவர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்வதில்லை “.திருக்குர்ஆன் 26:121.” அவரையும், கப்பலில் இருந்தோரையும் காப்பாற்றினோம். இதை அகிலத்தாருக்குச் சான்றாக்கினோம் “. திருக்குர்ஆன் 29:15.” பலகைகள் மற்றும் ஆணிகள் உடைய கப்பல் ஒன்றில் அவரை ஏற்றினோம். அது நமது கண்காணிப்பில் ஓடியது. இது தன் சமுதாயத்தால் மறுக்கப் பட்டவருக்கு நூஹுக்கு உரிய கூலி. அதைச் சான்றாக விட்டு வைத்தோம். படிப்பினை பெறுவோர் உண்டா? “.திருக்குர்ஆன் 54:13-15.
இவ்வசனங்களில் நூஹ் நபியின் கப்பலை அத்தாட்சியாக மலையின் மேல் விட்டு வைத்திருப்பதாக திருக்குர்ஆன் கூறுகின்றது. மலை போன்ற உயரத்திற்கு வெள்ளம்வந்ததால் ஜூதி மலைக்கு மேல் கப்பல் நிலை கொண்டது. இம்மலை துருக்கி நாட்டின் எல்லையில் அமைந்துள்ளது.துருக்கி நாட்டைச் சேர்ந்த போதான் மாவட்டத்திலுள்ள அரராத் என்ற மலை தான் ஜூதி மலை என்று ஆராய்ச்சி யாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஒருமலையேறும் குழு அம்மலையை ஆய்வு செய்து பனிப் பாறைகளுக்கு அடியில் கப்பல் துண்டுகள் இருந்ததைக் கண்டு பிடித்துள்ளது.1969ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், 2 ஆம் தேதியன்று கிழக்குத்துருக்கியின் ரஷ்ய எல்லையில் அமைந்துள்ள அரராத் மலைத் தொடரில் ஒரு கப்பலின் சில மரப் பகுதிகளை அந்த ஆராய்ச்சிக்குழு கண்டுபிடித்தது. இம்மலைத் தொடரின் மேற்குப்பகுதியில், 16,000 அடி உயரத்தில் பனியால் மூடப்பட்ட பாறைகளுக்கிடையே 20 மீட்டர் ஆழத்தில், அக்கப்பலின் மரப் பலகைகள் புதைந்து கிடந்தன. 16 ஆயிரம் அடி உயரமுடைய மலையின் மேல் ஒரு கப்பல் நிலை கொண்டுள்ளது என்றால் அந்த அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்க வேண்டும். அதன் காரணமாக அந்த மலைக்கும் மேலே கப்பல் மிதந்து கொண்டு இருக்கும் போது வெள்ளம் வடிந்திருக்க வேண்டும். இதனால் அந்தக் கப்பல் மலையின் மீது நிலை கொண்டிருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் ஊகித்துச் சொல்வதை திருக்குர்ஆன் 1430 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி விட்டது.மலையின் மேலே கப்பலைக் கொண்டு போய் வைத்தது யார்? என்ற கேள்விக்குத் திருக்குர்ஆன் மட்டுமே தக்க விடை கூறுகிறது.http://news.nationalgeographic.com/news/2010/04/100428-noahs-ark-found-in-turkey-science-religion-culture http://www.youtube.com/watch?v=X3t8UncLxsA&feature=relatedhttp://www.foxnews.com/scitech/2010/04/27/noahs-ark-found-turkey-ararat/http://www.noahsarksearch.com/The_Explorers_Of_Ararat_1973-2006_Bob_Stuplich.pdfhttp://www.noahsarksearch.com/book/--------------------------------------------------------//இஸ்லாமிய புராண புர்ராக் (முகமது(சல்) அவர்களை சுவனம் அழைத்து சென்ற விலங்கு.// -சார்வாகன்இப்படி ஒரு விலங்கை முகமது நபி காட்டவில்லை. சிலர் கற்பனையாக வரைந்து கொண்ட உருவமே புறாக் என்ற மனித தலையுடைய இந்த வாகனம்.-------------------------------------------------------//குரான் [வழக்கம் போல்] இந்த விடயத்தையும் தெளிவாக சொல்லவில்லை ஆகவே அந்த இடத்தில் மட்டும் வெள்ள‌ப் பெருக்கு வந்தது எனப் பொருள் கொள்வேன் என்கிறார்.அந்த இடம் என்றால் எங்கே என்று கேட்க கூடாது!!!!!!!!!!ஆகவே இது மோசடியா இல்லையா என்பதை உங்கள் கவனத்திற்கு விடுகிறேன்!!// -சார்வாகன்நோவா வெள்ளப்பிரளயம் ஏற்பட்டது எந்த இடம் என்று குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கிறார். ஜூதி மலை என்ற ஒரு க்ளூ போதுமே. நோவா வாழ்ந்த இடம் அராரத் மலை எல்லாம் ஒத்து வருவதால் அந்த இடத்தில் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். ஆய்வுகளின் முடிவில் ஆச்சரியமாக அவர்களுக்கு பெரும் கப்பலின் மரத்துண்டுகள் கிடைத்துள்ளன. அதை ஆய்வு செய்ததில் நோவாவின் காலத்திய பண்டைய மரப் படிமங்கள் என்று அறிவியல் அறிஞர்கள் ஒத்துக் கொண்டுள்ளனர். இதற்கான காணொளிகளே நாம் மேலே பார்ப்பது. இதில் என்ன மோசடி இருக்கிறது? பில்ட் டவுன் மோசடியைப் போல யாராவது எடுத்து ஒட்ட வைத்து கொண்டால் இவர் சொல்வதில் நியாயம் உள்ளது. இதை நிரூபித்தவர்கள் அமெரிக்க ஆய்வாளர்கள் அல்லவா?நாம் அறிவியல் ரீதியாக ஆய்வுகளின் அடிப்படையில் பரிணாமவியலின் மேல் கேள்விகளை வைக்கிறோம். அதற்கு நேரிடையாக பதில் சொல்வதை விட்டு விட்டு தற்போது நோவா கப்பலை கொண்டு வருகிறார்.அதற்கும் ஆதாரங்களை சமர்ப்பித்தாகி விட்டது. குர்ஆன் குறிப்பிட்டு இந்த இடம் என்று சொல்லா விட்டாலும் படிம சோதனைகள் மூலம் இதனை கண்டு பிடித்தது அமெரிக்க ஆராய்ச்சியாளர்களே என்பதையும் இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment